நாளை 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு - கலெக்டர் உத்தரவு!
நாளை தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இதன்படி நாளை இந்த இரு மாவட்டங்களிலும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்புவானோடையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஷேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 725-ஆம் ஆண்டு பெரிய கந்தூரி விழா தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

தர்கா விழாவின் முக்கிய நிகழ்வுகளை முன்னிட்டு நாளை அக்டோபர் 22-ம் தேதி திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை பொருந்தும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், வரும் அக்டோபர் 24-ஆம் தேதி (சனிக்கிழமை) வழக்கமான வேலை நாளாகச் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

அதே போன்று நாளை அக்டோபர் 22ம் தேதி ராஜ ராஜ சோழனின் சதய விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். எனினும் குறைந்த பணியாளர்களுடன் முக்கிய அரசு அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் நாளை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
