மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு!
Updated: Sep 7, 2026, 07:33 IST
மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில், தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாளான வரும் செப்டம்பர் 11ம் தேதி, உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்காது. இதன் மூலம் வெள்ளி, சனி, ஞாயிறு என பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மூன்று நாட்களுக்குத் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

அதே போன்று மதுரை மாவட்டத்தில், புகழ்பெற்ற அருள்மிகு மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வரும் செப்டம்பர் 16 மற்றும் 17 ஆகிய இரு தேதிகளிலும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
