இன்று சிவகங்கையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - இமானுவேல் சேகரன் குருபூஜையையொட்டி தீவிர பாதுகாப்பு!

 
விடுமுறை

தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜையைக் முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சில ஒன்றியங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை, சாக்கோட்டை உள்ளிட்ட 7 ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கீழடி அருங்காட்சியகத்திற்கு இன்று செப்டம்பர் 11ம் தேதி ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இமானுவேல் சேகரன்

தியாகி இமானுவேல் சேகரன் குருபூஜையை முன்னிட்டு பரமக்குடியில் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கைக் கருத்தில் கொண்டு, பரமக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 8,000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.