இன்று மதுராந்தகம், தாராபுரத்தில் ஊதியத்துடன் பொது விடுமுறை அறிவிப்பு - பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை!

 
விடுமுறை பள்ளி மாணவர்கள்

தமிழக சட்டமன்றத் தொகுதிகளான மதுராந்தகம் (தனி) மற்றும் தாராபுரம் (தனி) ஆகிய தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுவதை முன்னிட்டு அப்பகுதிகளுக்குப் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல்

இத்தொகுதிகளுக்குட்பட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று முழு பொது விடுமுறை அளிக்கப்பட்டு நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கும்.

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல்

செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பணிபுரியும் ஊழியர்கள், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் வாக்காளர்களாகப் பதிவு செய்திருந்தால் அவர்களுக்கும் இந்தத் தேர்தல் நாளான இன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் தங்கள் ஜனநாயகக் கடமையைச் சிரமமின்றி நிறைவேற்றும் வகையில் இந்தச் சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.