பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மார்ச் 11-ம் தேதி! அதிரடி அறிவிப்பு!

 
விடுமுறை

வருகிற 11-ம் தேதி அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா.

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூர் பகுதியில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசித்திருவிழா கடந்த 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் கோவிலில் அம்மன் புறப்பாடு நடைபெற்று வருகிறது. மேலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம் நடைபெற்று வருவதோடு, பக்தர்களும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 11-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

மாணவிகள் படிப்பு விடுமுறை தேர்வு சிபிஎஸ்இ

மேலும் அதற்கு பதிலாக 16-ம் தேதி சனிக்கிழமை அன்று பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று பணி நாள் எனவும் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா அறிவித்தார்.

இந்த உள்ளுர் விடுமுறை 1881-ம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல எனவும், இந்த உள்ளுர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டு திறந்திருக்கும். மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் என கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

From around the web