4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு!

 
பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகத்தில் நாளை ஈரோடு, சேலம், திருப்பூர், நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் காங்கேயத்தில் 1756-ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி பிறந்தார் தீரன் சின்னமலை. இளம் வயதிலேயே வெள்ளையர்களை எதிர்த்து நாட்டின் சுதந்திரத்திற்காக போரிட்டு பல்வேறு போர்களில் வெற்றிவாகை சூடியவர். பின்னர், சூழ்ச்சி மூலமாக கைது செய்யப்பட்டு, சங்ககிரி கோட்டையில் 1805ம் ஆண்டு ஆடிப்பெருக்கு அன்று தூக்கிலிடப்பட்டார். அவரை பெருமைப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் தமிழக அரசின் சார்பில் ஆடிப்பெருக்கு தினத்தன்று நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், நாளை ஆகஸ்ட் 3-ம் தேதி தீரன் சின்னமலை நினைவு நாளை முன்னிட்டு சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

விடுமுறை

இந்த உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 19-ம் தேதி ஈடுகட்டும் பணி நாளாகவும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற 12-ம் தேதி ஈடுகட்டும் பணி நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போன்று கடையெழு மன்னர்களில் ஒருவரான வல்வில் ஓரி விழா இன்றும், நாளையும் நடைப்பெறுகிறது. இந்த விழாவினை முன்னிட்டு, ஆகஸ்ட் 3ம் தேதி நாமக்கல் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உமா உத்தரவிட்டுள்ளார்.

வல்வில் ஓரி

இந்நிலையில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தை திருப்பூர் மாவட்டத்திலும் உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் உத்தரவிட்டுள்ளார். 

திருப்பூரில், இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி சனிக்கிழமை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, சேலம், திருப்பூர், நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த மாவட்டங்களில் நாளை அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய அலுவலகங்கள், அரசு கருவூலங்கள் ஆகியவை குறைந்த பணியாளர்களுடன் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web