இன்று 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை... கனமழையால் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மக்கள் அவதி!
Updated: Oct 23, 2026, 08:25 IST
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில், அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையின் தாக்கம் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
