நாளை தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டம் முழு லிஸ்ட்!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நாளை 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழகக் கடற்கரையை நோக்கி நகர்வதால், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழையின் தீவிரத்தைப் பொறுத்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே சூழலுக்கு ஏற்ப முடிவெடுப்பார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் மாவட்ட நிர்வாகங்களால் வெளிவரவில்லை.

எனவே, சமூக வலைத்தளங்களில் பரவும் வதந்திகளை நம்பாமல், நாளை காலை மழையின் அளவைப் பொறுத்து மாவட்ட ஆட்சியர்கள் வெளியிடும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
