தமிழகத்தில் மழை எச்சரிக்கை - பள்ளிகளுக்கு விடுமுறை விட வாய்ப்புள்ளதாகத் தகவல்!

 
மழை மாணவி

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நிலவும் வானிலை மாற்றம் காரணமாகப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை கல்லூரி விடுமுறை மாணவிகள் குடை

இப்பகுதிகளில் தொடரும் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக மேற்கண்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மாவட்ட ஆட்சியர்களின் சூழ்நிலைக்கேற்ப வெளியாகும்.

தமிழகத்தின் ஏனைய பிற மாவட்டங்களிலும் ஒரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.