தமிழகத்தில் மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை - அக்டோபரில் மட்டுமே 16 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை!

 
#BREAKING: சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

தமிழகத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறையின் உற்சாகம் அடங்குவதற்குள், பள்ளி மாணவர்களுக்கு ஆயுத பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுமுறை பள்ளி மாணவர்கள்

அக்டோபர் 19-ம் தேதி திங்கட்கிழமை ஆயுத பூஜை மற்றும் அக்டோபர் 20-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை விஜயதசமி ஆகிய அரசு விடுமுறைகள் வருகின்றன. அதற்கு முந்தைய நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையும் இணைவதால், மாணவர்களுக்குத் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.

நடப்பு அக்டோபர் மாதத்தில் காலாண்டுத் தேர்வு விடுமுறைகள் மற்றும் வார இறுதி நாட்களுடன் சேர்த்து மொத்தம் 16 நாட்கள் விடுமுறை வருவதால் பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

விடுமுறை

நடப்புக் கல்வியாண்டில் ஜூன் மாதத்தில் 12 நாட்களும், ஜூலை மாதத்தில் 8 நாட்களும், ஆகஸ்ட் மாதத்தில் 11 நாட்களும், செப்டம்பர் மாதத்தில் 10 நாட்களும் மட்டுமே விடுமுறை கிடைத்த நிலையில், அக்டோபர் மாதத்தில் அதிகபட்சமாக 16 நாட்கள் விடுமுறை கிடைப்பது குறிப்பிடத்தக்கது.