தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் 4-ல் திட்டமிட்டப்படி திறக்கப்படும்" - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு!

 
பள்ளி புத்தகப்பை விடுமுறை  மாணவர்கள் திறப்பு பள்ளி புத்தகப்பை விடுமுறை  மாணவர்கள் திறப்பு

சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கம் இன்னும் குறையாததால் தமிழகத்தில் ஜூன் 4-ல் பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப் போகுமா என்ற விவாதங்கள் கடந்த சில நாட்களாகப் பெற்றோர்கள் மத்தியில் பரவலாக எழுந்து வந்தது. இந்தச் சூழலில், சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி வரும் ஜூன் 4-ம் தேதி (வியாழக்கிழமை) பள்ளிகள் அனைத்தும் முறைப்படி திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

பள்ளி திறப்பு மாணவர்கள்

கடந்த சில வாரங்களாக நீடித்து வந்த வெயிலின் கொடுமையால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகப் பரவிய வதந்திகளுக்கு அமைச்சர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். "தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து, முன்கூட்டியே திட்டமிட்டிருந்தபடி வரும் ஜூன் 4-ம் தேதி அனைத்துப் பள்ளிகளும் தங்கு தடையின்றித் திறக்கப்படும். இதில் எவ்வித மாற்றமும் இல்லை" என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

பள்ளிகள் திறக்கப்படும் அதே வேளையில், வரவிருக்கும் பருவமழைக் காலத்தை எதிர்கொள்ளத் தவெக அரசு எடுத்துள்ள அதிநவீனப் பாதுகாப்புப் பணிகள் குறித்தும் அவர் விவரித்தார்.

செங்கோட்டையன்

"தமிழக முதலமைச்சரின் உத்தரவின்படி, துறைவாரியாக அனைத்து அமைச்சர்களும் தீவிர கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம். வரவிருக்கும் பருவமழை மற்றும் இயற்கை பாதிப்புகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பாகப் பராமரிப்பதற்கு எங்கள் துறை மிக அசுர வேகத்தில் செயல்பட்டு வருகிறது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துத் துல்லியமாகக் கண்டறிய 3 முக்கிய இடங்களில் ரேடார் மூலம் 24 மணி நேரமும் தீவிர ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எவ்விதப் பாதிப்புகளையும் தடுக்கத் தவெக அரசு  முழுத் தயார் நிலையில் உள்ளது" என்றார்.