இன்று நவ.17 பள்ளிகளுக்கு விடுமுறை... மாவட்ட கலெக்டர் அறிவிப்பு!

 
இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

இன்று நவம்பர் 17ம் தேதி நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து, அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில், சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்தார் முருகர் என கந்தபுராணம் கூறுகிறது.  அதன்படி வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயத்தின் கந்தசஷ்டி விழா இம்மாதம் 13ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைப்பெற்று வருகிறது. 

முருகன்

இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமும், வேல் வாங்குதல் நிகழ்வும் இன்று நவம்பர் 17ம் தேதி நடைப்பெறுகிறது. இதையொட்டி, பக்தர்கள் சிக்கலில் குவிந்துள்ளனர். இந்நிலையில், தேரோட்டத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

திருச்செந்தூர் முருகன்

இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில், வரும் டிசம்பர் 2ம் தேதி நாகை மற்றும் திருமருகல் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினந்தோறும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!

From around the web