நாளை பள்ளிகள் திறப்பு - மாவட்டக் கல்வி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய உத்தரவு!

 
பள்ளி வகுப்பறை பள்ளி வகுப்பறை

கோடை விடுமுறை முடிந்து நாளை தமிழகம் முழுவதும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், மாணவ-மாணவிகளின் பாதுகாப்பை மிகத் துல்லியமாக உறுதி செய்யக் கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு முக்கிய அவசர அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

நாளை பள்ளிகள் திறக்கப்படும் போது, மாணவர்களுக்கு எவ்வித அசௌகரியங்களும், பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் ஏற்படக் கூடாது என்பதில் அரசு மிக உறுதியாக உள்ளது. இதற்காக மாவட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்குப் பின்வரும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

பள்ளி புத்தகப்பை விடுமுறை  மாணவர்கள் திறப்பு

அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாணவர்களுக்குத் தூய்மையான மற்றும் பாதுகாப்பான குடிநீர் தங்கு தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகங்கள் மற்றும் வகுப்பறைகள் முழுமையாகத் தூய்மைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைகள் அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்பட்டு, சுகாதாரமான முறையில் இருப்பதை அதிகாரிகள் நேரில் பார்வையிட வேண்டும்.

பள்ளி திறப்பு மாணவர்கள்

பள்ளிகளில் உள்ள அனைத்து மின் இணைப்புகள், சுவிட்ச் போர்டுகள், மின் விசிறிகள் மற்றும் கணினி ஆய்வகங்களில் உள்ள மின்சாதன அமைப்புகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளதா என்பதை மாவட்டக் கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் மிகத் தீவிரமாக நேரில் ஆய்வு செய்து சான்றளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சேதமடைந்த மின் கம்பிகள் அல்லது சுவிட்சுகள் இருந்தால் அவற்றை உடனடியாக மாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.