நாளை சென்னையில் அறிவியல் பேரணி!
நாளை சென்னை பெசண்ட் நகரில் அறிவியல் பேரணி நடைபெற உள்ளது. இந்தியாவில் செயல்படும் அறிவியல் இயக்கங்கள் இணைந்து நாளை சென்னையில் இந்த அறிவியல் பேரணியை முன்னெடுக்கின்றன.

இந்தப் பேரணி பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் ஆகஸ்ட் 11 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3.00 - 5.00 மணிவரை நடைபெறவிருக்கிறது. 'அறிவியல் மக்களுக்கே!', 'அறிவியல் சமூக மாற்றத்துக்கே!', 'மக்களை மையப்படுத்தி அறிவியல் தொழில்நுட்பக் கொள்கைகளை வகுக்க வேண்டும்!' என்பது உள்ளிட்ட முழக்கங்களை முன்வைத்து இந்தப் பேரணி நடைபெறுகிறது.

இந்த பேரணியில் அறிவியல் அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் இயக்கங்களின் செயல்பாட்டாளர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கவிருக்கிறார்கள்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
