சுட்டெரிக்கும் கோடை... தமிழகத்தில் 3 இடங்களில் இன்று வெயில் சதம்!

 
வெயில் வெயில்

தமிழகத்தில் கோடை காலத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல பகுதிகளில் வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில், இன்று மட்டும் மூன்று முக்கிய இடங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டியுள்ளது. இதனால் பகல் நேரங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

உஷார்! அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் இந்த 13 மாவட்டங்களில் வெயில் கொளுத்துமாம்!

இன்று பதிவான வானிலை தரவுகளின்படி, அதிகபட்சமாக ஈரோட்டில் 101.48 டிகிரி பாரன்ஹீட் (38.6 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து கரூர் பரமத்தி மற்றும் வேலூர் ஆகிய இரண்டு இடங்களிலும் தலா 100.4 டிகிரி பாரன்ஹீட் (38.0 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவாகியுள்ளது. மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்தாலும், பெரும்பாலான இடங்களில் வெப்பத்தின் தீவிரம் குறையாமல் உள்ளது.

வெயில் வெப்பம் அக்னி

வெப்பத்தின் பிடியிலிருந்து தப்பிப்பதற்காகப் பொதுமக்கள் இளநீர், நுங்கு மற்றும் பல்வேறு குளிர்பானக் கடைகளை அதிகளவில் நாடி வருகின்றனர். வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால், மதிய நேரங்களில் நீண்ட தூரம் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தத் திடீர் வெப்ப உயர்வு காரணமாகத் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அனல் காற்று வீசி வருவது குறிப்பிடத்தக்கது.