அலறும் மக்கள்.. மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்தால் பள்ளிகளுக்கு விடுமுறை... பிடிக்க நடவடிக்கைகள் தீவிரம்!

 
சிறுத்தை
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, அந்த பகுதியில் உள்ள 7 பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்னும் நிறைவடையாத நிலையில், பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகளில் தீயணைப்புத்துறை பாதுகாப்புடன் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர். 

மயிலாடுதுறை செம்மங்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவலளித்தனர். இதனையடுத்து, அப்பகுதியில் சிறுத்தையின் கால் தடம் இருந்ததை போலீசாரும் உறுதி செய்தனர். 

சிறுத்தை நடமாட்டம்

அதனைத் தொடர்ந்து, சிசிடிவி காட்சிகளில் சிறுத்தையின் நடமாட்டம் அந்த பகுதியில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. சுமார் 10க்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்று சேர்ந்து சிறுத்தையை துரத்திச் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தது.

இதனைத் தொடர்ந்து வனத்துறையினர், காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்பகுதி முழுவதையும்  ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. சிறுத்தை பதுங்கி இருப்பதாகக் கருதப்படும் கூறைநாடு, தெற்கு சாலிய தெரு, வடக்கு சாலிய தெரு, மேல ஒத்தசரகு, கீழ ஒத்தசரகு, பூக்கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள் அடர்ந்த இடங்கள்,  பழங்காவிரி கரை பகுதிகளில், வனத்துறையினர் வலைகள் மற்றும் கயிறுகளுடன் தீவிரமாகச் சிறுத்தையைத் தேடி வருகின்றனர்

சிறுத்தை

பொதுமக்களும் சிறுத்தை நடமாட்டம் குறித்து தெரியவந்தால், தகவல் அளிக்க சீர்காழி வனச்சரக அலுவலரின் 9994884357 செல்போன் எண் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில், சிறுத்தை நடமாட்டம் குறித்து பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என்றும் விரைவில் சிறுத்தையைப் பிடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web