அலறும் பொதுமக்கள்... நீலகிரியில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் கருஞ்சிறுத்தை!
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் கருஞ்சிறுத்தை ஒன்று உலா வந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள உணவு/தீவனப் பற்றாக்குறை மற்றும் வன எல்லை சுருக்கம் காரணமாகச் சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவது அதிகரித்து வருகிறது.
குன்னூர் அருகே உள்ள கரோலினா பகுதியில் நேற்று இரவு இரை தேடி வந்த கருஞ்சிறுத்தை ஒன்று வீடுகளுக்கு அருகே சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துள்ளது. அரிய வகையான கருஞ்சிறுத்தை குடியிருப்புப் பகுதியில் உலா வந்ததை நேரில் பார்த்த பொதுமக்கள் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர்.
இரவிலும் அதிகாலை வேளையிலும் நடமாடும் இந்தச் சிறுத்தையைக் கூண்டு வைத்துப் பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு போய் விட வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
