11 நாட்களாக தேடுதல் வேட்டை... மாயமான சிறுமி குறித்து தாயிடம் சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை!
Oct 22, 2026, 15:45 IST
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயமான வழக்கில், 11-வது நாளாகத் தேடுதல் பணி தொடரும் நிலையில், சிபிசிஐடி காவல்துறையினர் சிறுமியின் தாயிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செஞ்சி அருகே கடந்த 11 நாட்களுக்கு முன்பு சிறுமி ஒருவர் திடீரென மாயமானார். இதுவரை சிறுமி கண்டுபிடிக்கப்படாத நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சிறுமி மாயமாவதற்கு முன்பு கடைசியாக எங்கு இருந்தார், யாருடன் தொடர்பு கொண்டிருந்தார் என்பது போன்ற பல்வேறு கோணங்களில் சிறுமியின் தாயிடம் காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறுமியை மீட்கும் பணிக்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
