சென்னையில் மீண்டும் முதலீட்டாளர்கள் சங்கமம்: 25-ம் தேதி நடைபெறும் மாநாடு

 
வெற்றி

 

தமிழகத்தில் 2-வது 'வெற்றி தமிழ்நாடு' முதலீட்டாளர்கள் மாநாடு வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி சென்னையில் நடைபெற்ற முதலாவது முதலீட்டாளர்கள் மாநாட்டில், 97 நிறுவனங்களுடன் ரூ.67,452 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது.

சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது! The TVK government first investors conference has begun in Chennai

இதற்கிடையே, தமிழகத்தில் மே மாதம் முதல் இதுவரை 112 நிறுவனங்களுடன் ரூ.1.14 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் மூலம் 1.42 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்பு | 'Vetri Tamil Nadu' Investors' Meet held in Chennai today; Chief Minister Vijay ...

இந்த முதலீட்டு ஒப்பந்தங்களை அடுத்தகட்டமாகச் செயல்படுத்துவது, தொழில் திட்டங்களின் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவது உள்ளிட்ட நோக்கங்களுடன் 2-வது மாநாடு நடைபெற உள்ளதாகத் தெரிகிறது.நவம்பர் 25-ம் தேதி நடைபெற உள்ள இந்த மாநாடு தொடர்பான அறிவிப்பை தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறையும் வெளியிட்டுள்ளது.