2வது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாடு: ரூ.58,214 கோடி முதலீடு, 65000 பேருக்கு வேலைவாய்ப்பு!
Nov 25, 2026, 11:49 IST
தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று (நவ.25) நடைபெற்ற 2ஆவது வெற்றி முதலீட்டாளர்கள் மாநாட்டில், 78 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் ரூ.58,214 கோடி புதிய முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த முதலீடுகள் மூலம் மாநிலத்தில் 65,786 பேருக்குப் புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கையெழுத்தான ஒப்பந்தங்களையும் சேர்த்து இதுவரை 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.75 லட்சம் கோடி முதலீடுகள் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து ஈர்க்கப்படும் முதலீடுகள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது
