சுழற்சி முறையில் சீமான், அன்புமணி முதலமைச்சராகலாம் - வேல்முருகன் கருத்து!
திராவிட கட்சிகளுக்கு மாற்றாக புதிய கூட்டணி வெற்றி பெற்றால், சுழற்சி முறையில் சீமானும் அன்புமணி ராமதாசும் முதலமைச்சராக வாய்ப்புள்ளதாகத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக நாம் தமிழர் கட்சியுடன் நெருக்கம் காட்டி வரும் வேல்முருகன், திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு புதிய கூட்டணியை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது. இக்கூட்டணி தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் சுழற்சி முறையில் தமிழகத்தின் முதலமைச்சராகப் பதவியேற்க வாய்ப்புள்ளது என்று வேல்முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், சீமான் சட்டப்பேரவைக்குள் நுழைந்து தனது குரலைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இந்த அரசியல் நகர்வானது தவெக-வை இலக்காக வைத்துத் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்களும் அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளன.
