அம்பாசமுத்திரம் இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக சீமான் அறிவிப்பு... தவெக அரசு மீது காரசாரமான விமர்சனம்!
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் தானாகவே நேரடியாகப் போட்டியிடப்போவதாக அறிவித்து அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார்.

திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் நானே நேரடியாகப் போட்டியிடுகிறேன்" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
தமிழக வெற்றி கழகத்தினரைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், "என்னைப் பார்த்துத் தவெக-வினர் ஏன் பயப்படுகிறார்கள்? அனைத்து சமூகத்திற்கும் பொதுவான வேட்பாளராக நான் களமிறங்குகிறேன்" என்று குறிப்பிட்டார்.

சமீபத்தில் கைதிகள் தப்பிச் சென்ற விவகாரத்தில் சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைக்காக டிஜிபி மாற்றப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டினார். அதிகாரிகளை மட்டும் மாற்றுவது தீர்வாகாது எனக் குறிப்பிட்ட சீமான், "சம்பந்தப்பட்ட சிறைத்துறை அமைச்சர் இதற்குப் பொறுப்பேற்று உடனடியாகப் பதவி விலகுவாரா?" எனத் தமிழக அரசுக்குக் காரசாரமான கேள்வியை எழுப்பினார்.
