இன்று முதல் நாதக வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தீவிர தேர்தல் பிரச்சாரம்!

 
சீமான்

அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தாராபுரம் மற்றும் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று முதல் தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.

தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு.கார்த்திகாவை ஆதரித்து இன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் சீமான் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளிலும் அவர் தாராபுரம் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார்.

சீமான்

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 26 முதல் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தைத் தொடங்கும் அவர், அப்பகுதியில் உள்ள வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.

தேர்தல் தேதி நெருங்கும் இறுதிக்கட்டமாக, அக்டோபர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் மீண்டும் தாராபுரம் தொகுதிக்குச் சென்று தீவிரமான தேர்தல் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள உள்ளார்.