கண்ணீர் வணக்கம்... ஈவிகேஎஸ் மறைவுக்கு சீமான் இரங்கல்!
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். ஏற்கனவே அவருக்கு இதயம் தொடர்பான பாதிப்பு இருந்து வந்த நிலையில் நவம்பர் 28ம் தேதி அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. நுரையீரலில் உள்ள சளி காரணமாக ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில், அவர் உடனடியாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) December 14, 2024
ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும்,… pic.twitter.com/MVbmdtUc7d
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “ காங்கிரசு கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மதிப்பிற்குரிய ஐயா ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெருந்துயரமடைந்தேன்.

ஐயாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், காங்கிரசு கட்சியின் தொண்டர்களுக்கும், ஈரோடு கிழக்கு தொகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன். ஐயா இளங்கோவன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்” என பதிவிட்டுள்ளார்.
கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
