அதிர்ச்சி... ரூ.1.25 கோடி மதிப்புள்ள பீடி இலைகள்... இலங்கைக்கு கடத்த முயன்ற நிலையில் பறிமுதல்!

 
பீடி இலைகள்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக குடோனில் பதுக்கிய ரூ.1¼ கோடி பீடி இலைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

தூத்துக்குடி வழியாக இலங்கைக்கு பீடி இலை, கஞ்சா, மஞ்சள் போன்றவற்றை கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இலங்கையில் பீடி இலைகளை கஞ்சாவுடன் சேர்த்து பயன்படுத்துவதால் அவற்றை கடத்தல்காரர்கள் அதிகளவில் கடத்துகின்றனர். சட்டவிரோத கடத்தலை தடுப்பதற்காக, தூத்துக்குடி சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

பீடி இலைகள்

ஏற்கனவே கடத்தல் வழக்கில் கைதானவர்களிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி- விருதுநகர் மாவட்ட எல்லையான அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடியை அடுத்த சேதுராஜபுரத்தில் உள்ள குடோனில் பீடி இலைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே சுங்கத்துறை அதிகாரிகள் அந்த குடோனுக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது குடோனில் ஏராளமான பீடி இலை பண்டல்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. பீடி இலை கட்டுகள் பண்டல்களாக கட்டுவதற்காக குவித்து வைக்கப்பட்டு இருந்தன. மேலும் அங்கு மினி லாரியில் பீடி இலை பண்டல்களை ஏற்றி கடத்தி செல்வதற்கும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

அதிர்ச்சி... இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்!

உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் அந்த குடோனில் இருந்த 8,305 கிலோ பீடி இலை, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி, பேக்கிங் செய்வதற்காக வைத்து இருந்த உபகரணங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலையின் இலங்கை மதிப்பு சுமார் ரூ.1 கோடியே 25 லட்சம் ஆகும்.

குடோனில் பீடி இலையை குறிப்பிட்ட எடை அளவில் பண்டல்களாக கட்டி தூத்துக்குடி மாவட்ட கடல் வழியாக இலங்கைக்கு கடத்தியது தெரிய வந்தது. இதுதொடர்பாக தூத்துக்குடியைச் சேர்ந்த முடியப்பன் என்பவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார்த்திகை ஸ்பெஷல்... சங்காபிஷேகம் விரதமுறை, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!