இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்திற்குள் தேங்கிய மழைநீர் - சேகர்பாபு கண்டனம்!

 
இந்து சமய அறநிலைய துறை வெள்ளம்

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தின் உள்ளேயும் வெளியேயும் மழைநீர் தேங்கியுள்ள விவகாரம் குறித்து சேகர்பாபு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பெய்துவரும் கனமழையின் காரணமாக நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலக வளாகத்திலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் பதிவில், கடந்த காலங்களை ஒப்பிடும் போது தற்போது அலுவலக வளாகத்தில் மழைநீர் தேங்கியுள்ளதும், மாநகராட்சியைப் போலவே அறநிலையத்துறையும் அலட்சியப் போக்கில் செயல்படுவதும் கவலை அளிப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலைய துறை வெள்ளம்

கோவில்களின் நிர்வாகம், சொத்துப் பாதுகாப்பு, பழமையான ஓலைச்சுவடிகள் மற்றும் அரிய ஆவணங்களைப் பாதுகாப்பது போன்ற முக்கியப் பொறுப்புகளைக் கொண்ட துறையின் அலுவலகத்தில் நீர் தேங்கியுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, நூலகங்களிலும் ஓலைச்சுவடிப் பாதுகாப்புப் பெட்டகங்களிலும் உள்ள அரிய ஆவணங்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படாமல் பாதுகாப்பதை உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும், இதற்குரிய காரணங்கள் மற்றும் பொறுப்பான அதிகாரிகள் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.