திருத்தணி கோவிலுக்கு வந்த சேகர்பாபு கார் அடிவாரத்திலேயே தடுத்து நிறுத்தம் - போலீசாருடன் வாக்குவாதம்!
Aug 6, 2026, 17:50 IST
ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்யக் குடும்பத்துடன் வந்த இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் அமைச்சர் சேகர்பாபுவின் காரைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ஆடிக்கிருத்திகை விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளதால், பாதுகாப்பு காரணங்களுக்காக மலை மீது வாகனங்களை அனுமதிக்க முடியாது எனக் கூறி அடிவாரத்திலேயே சேகர்பாபுவின் காரைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
காவல் அதிகாரிகளின் இந்த நடவடிக்கையை அடுத்து, சம்பவ இடத்தில் காவல்துறையினருக்கும் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு தரப்பிற்கும் இடையே தீவிர வாக்குவாதம் ஏற்பட்டது.
