விமானத்தில் ரகளை… விமானப் பணிப்பெண்கள் மீது தாக்குதல்! ஹாலிவுட் நடிகை செல்மா பிளேயர் கைது

 
ஹாலிவுட்

 

அமெரிக்காவில் விமானத்தில் பயணித்த பிரபல ஹாலிவுட் நடிகை செல்மா பிளேயர், நடுவானில் திடீரென ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரைக் கட்டுப்படுத்த முயன்ற 2 விமானப் பணிப்பெண்களைத் தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மருத்துவமனையிலும் தாக்கியதாகக் குற்றச்சாட்டு

மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கிருந்த பெண் காவலர் மற்றும் செவிலியர்களையும் அவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, நரம்பியல் நோய்க்கான மருந்தை உட்கொள்ளத் தவறியதே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என நடிகை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Selma Blair Arrested For Attacking Flight Attendants Mid-Air On Delta; FBI Steps In | Curly Tales

இந்த வழக்கில் செல்மா பிளேயருக்கு ரூ.19 லட்சம் ஜாமீன் தொகை நிர்ணயிக்கப்பட்டதாகவும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.