செம மாஸ்... U19 உலகக் கோப்பையைத் தட்டித் தூக்கிய இந்திய மகளிர் அணி!

நடப்பு சாம்பியனான இந்தியா, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கி உள்ளது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. மேற்கு இந்திய அணியை முதல் இன்னிங்சில் 44 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அணி 4.2 ஓவரில் ஸ்கோரை எட்டியது.
Incredible start to the U19 T20 World Cup for India Women! Dominating performance against West Indies:
— SUBASH CHANDRAN (@pscn003) January 19, 2025
WIWU19: 44 all out in 13.2 overs
INDWU19: 47/1 in 4.2 overs
India wins by 9 wickets! Proud of our young champions! 🇮🇳🏆 #U19T20WorldCup #WomensCricket pic.twitter.com/c1gVG0sz1R
நேற்று கோலாலம்பூரில் உள்ள பேயுமாஸ் ஓவல் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம், நடப்புச் சாம்பியனான இந்தியா தனது U19 மகளிர் டி20 உலகக் கோப்பைப் போட்டியை மிகவும் ஸ்டைலாகத் தொடங்கியுள்ளது.
இந்திய அணி சார்பில், ஜோஷிதா தனது இரண்டாவது ஓவரிலேயே மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் சமரா ராம்நாத் ப்ளம்பில் சிக்க வைத்தார். அதைத் தொடர்ந்து அந்த ஓவரில் இரண்டாவது விக்கெட்டைப் பெற்றார். நைஜன்னி கம்பர்பாட்சை டக் அவுட்டாக பெவிலியனுக்கு அனுப்பினார்.
குழு A போட்டியில் இந்தியா தனது பிடியை இறுக்கியதால், சுழல் ஜோடியான ஆயுஷி சுக்லா மற்றும் பருணிகா சிசோடியா இணைந்தனர். சிசோடியா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய ஃபீல்டர்களும் சந்தர்ப்பத்திற்கு ஒத்துழைத்ததால் மேற்கு இந்திய மகளிர் அணியின் ஆட்டத்தில் ஒரு பார்ட்னர்ஷிப்பை அவர்களால் தக்க வைக்க முடியாமல் மூன்று ரன்-அவுட்களுக்கு உள்ளானார்கள்.
இந்நிலையில் 9 விக்கெட் வித்தியாசத்தில் மாஸான வெற்றியுடன் உலகக் கோப்பைப் போட்டியைத் துவங்கியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!