செம... சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்கும் அஞ்சறைப்பெட்டி!

 
சர்க்கரை
 

உலகம் முழுவதும் 40 சதவீதத்துக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தரும் ஆய்வறிகைகள் தெரிவிக்கின்றன. இதிலிருந்து நம்மை தற்காத்து கொள்ளவும், அதனை கட்டுப்பாட்டில் வைக்கவும் பாரம்பரிய உணவு பொருட்களை பயன்படுத்தலாம். வீட்டில் மசாலா டப்பாக்களில் இருப்பவையே ஆரோக்கியத்தின் முதல்படி.  இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது மிகவும் பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது.  மாறி வரும் வாழ்க்கை மற்றும் உணவுமுறையின் காரணமாக உருவாகிறது. நீரிழிவு நோய் வருவதற்கு 2 காரணங்கள் உள்ளன.

சர்க்கரை

முதலாவது நமது வாழ்க்கை முறை, இரண்டாவது நமது மரபணு. அதனால்தான் ஒரு நீரிழிவு நோயாளி தனது உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் அவ்வாறு செய்யாவிட்டால், உடலில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருக்கும்.சமையலறையில் இருக்கும் மசாலாப் பொருட்களைக் கொண்டும் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம் என்பது அனுபவப்பூர்வமான உண்மை. 
ஒரு பாத்திரத்தில் இலவங்கப்பட்டையை போட்டு நன்கு கொதிக்க வைத்து இலவங்கப்பட்டை தேநீர் தயாரித்து தொடர்ந்து குடித்து வரலாம். இதன் மூலம்  டைப்-2 நீரிழிவு அபாயத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.   கிராம்புகளை மெல்லுவதால் இன்சுலினை கட்டுப்பாட்டில் வைக்கலாம். இதனால்  ஆன்ட்டி செப்டிக், அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட கிராம்பு செரிமானத்தை சீராக்க வல்லவை.  

வெந்தயம்
இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி  ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து இஞ்சித் தேநீர் தயாரிக்கலாம். இதனை தொடர்ந்து குடித்து வர இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.  வெந்தய விதைகள் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த உணவுப் பொருள். இந்த விதைகளில் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்கி, கார்போஹைட்ரேட் மற்றும் சர்க்கரை உறிஞ்சி விடுகின்றன.இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.  மஞ்சளில் நிறைந்துள்ள குர்குமின் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மஞ்சள் நீர் இரத்த சர்க்கரை அளவைக் குறைப்பதோடு உடல் பருமனமாவதைத் தடுப்பதாக தெரிவிக்கின்றன.  

From around the web