செம தில்லு... லேடீஸ் ஹாஸ்டலில் பெண் வேடமிட்டு நுழைந்த இளைஞர்! வைரலாகும் வீடியோ!
தனியார் கல்லூரி ஒன்றில் மாணவிகளின் விடுதிக்குள், பெண் வேடமிட்டு நுழைந்த இளைஞர், ஹாஸ்டல் வார்டனிடம் வசமாக சிக்கி கொண்ட வீடியோ வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இருபத்தைந்து வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பெண் வேடமிட்டு பெண்கள் விடுதிக்குள் நுழைந்திருக்கிறார். அப்போது ஹாஸ்டல் வார்டன் அவரைப் பார்த்து சத்தம் போட்டுள்ளார். இதையடுத்து, மாணவிகளும், ஊழியர்களும் திரண்டனர். சோதனை மேற்கொண்டதில் அந்த இளைஞரின் பாக்கெட்டில் இருந்து காண்டம்களைக் கைப்பற்றியுள்ளனர்.
Kalesh b/w College officials and a guy over this guy disguised himself as a girl and sneaked inside the girls' hostel and got caught
— Ghar Ke Kalesh (@gharkekalesh) March 26, 2024
pic.twitter.com/MpMxqT8z0G
பெண் வேடமணிந்த ஒரு பையன் அவர்களிடம் சிக்கிக் கொள்கிறான். பெண் வார்டன் கைக்கு கிடைத்ததை வைத்து அடிக்கிறார். மேலும், மாணவிகள் மற்றும் ஊழியர்கள் இளைஞரை அடித்து இழுத்துச் சென்றனர். இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.
இதுதொடர்பான வீடியோவை தற்போது @gharkalesh X கணக்கில் வெளியிட்டுள்ளது, அதில் "பெண் வேடமணிந்து பெண்கள் விடுதிக்குள் பதுங்கியிருந்த ஆண் பிடிபட்டான்" என்ற தலைப்பில் பகிரப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!
பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!
திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்