6 தமிழ் திரைப்படங்கள் ஆஸ்கருக்கு அனுப்பி வைப்பு!

 
வாழை

 
சர்வதேச அளவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்று ஆஸ்கர். ஒவ்வொரு ஆண்டும்  சிறந்த திரைப்படங்கள் தேர்வு  செய்யப்பட்டு  ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படும். அதன்படி இந்தியா சார்பில் 28 திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன.  அதிலும் 6 தமிழ் திரைப்படங்கள்  ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றன.

ஜமா

விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’, சூரியின்  ‘கொட்டுக்காளி’, ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, மாரி செல்வராஜின் ‘வாழை’, ப.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘தங்கலான்’ மற்றும் ‘ஜமா’ ஆகிய  படங்களை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

வாழை திரைப்படம்

மொத்தமாக  இந்திய அளவில் 6 தமிழ் திரைப்படங்கள், 10 இந்தி திரைப்படங்கள், 5 மலையாளம், 3 மராத்தி மற்றும் 3 தெலுங்கு திரைப்படங்கள் உட்பட இந்தியா சார்பில் 28 திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஒரியா மொழி படம் ஒன்றையும் ஆஸ்கருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.  இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக ‘லபட்டா லேடீஸ்’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

From around the web