தவெகவில் இணைந்த செங்கோட்டையன்... விஜய் கொடி அணிவித்து வரவேற்பு!

 
தவெக
 

 

அதிமுக மூத்த தலைவர், முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று (27.11.2025) நடிகரும் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தார். கோபிசெட்டிபாளையம் எம்.எல்.ஏ. பதவியை நேற்று ராஜினாமா செய்த சில மணி நேரங்களிலேயே புதிய கட்சி சேர்ந்தமை தமிழக அரசியலில் புதிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. பனையூர் தவெக தலைமையகத்தில் நடந்த எளிய விழாவில் விஜய் நேரில் வந்து கொடி போர்த்தி வரவேற்றார்; ஆதரவாளர்கள் கோஷமிட்டும் பூக்கள் பொழிந்தும் உற்சாகம் காட்டினர்.

செங்கோட்டையன்

செங்கோட்டையனுடன் முன்னாள் எம்.பி. சத்யபாமா, அதிமுக முன்னாள் பொருளாளர் கந்தவேல் முருகன் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பலரும் ஒரே நேரத்தில் தவெகில் இணைந்தனர். எம்.ஜி.ஆர் காலம் தொடக்கம் அதிமுகவின் பிரதான முகமாக இருந்த செங்கோட்டையன், அண்மையில் கட்சி தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னர் நீக்கப்பட்டிருந்தார். இதன் பின்னர் அவர் எடுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அரசியல் வட்டாரத்தில் நீண்டநாள் ஊகங்கள் எழுந்த நிலையில், இன்று எடுத்த முடிவு பெரிய மாற்றமாகக் கருதப்படுகிறது.

செங்கோட்டையன்

கொங்கு மண்டலத்தில் செங்கோட்டையன் பெற்றுள்ள ஆதரவை கருத்தில் கொள்ளும் போது, தவெகின் அடுத்த தேர்தல் கணக்கில் இந்த இணைவு மிகச் Significant என பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர். 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இது தவெகின் வலிமையை அதிகரிக்கும் நகர்வாகவே பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சி முடிந்த பின் செங்கோட்டையன் ஊடகங்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கிறார் என தகவல் வெளியாகியுளது.