பெண் எம்எல்ஏவை கட்டிப்பிடிக்க பாய்ந்த மூத்த நிர்வாகி - காங்கிரஸ் அலுவலகத்தில் பரபரப்பு!

 
கேரளா கேரளா

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள மாநில காங்கிரஸ் கமிட்டி தலைமையகத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காகக் கொல்லம் தொகுதி எம்எல்ஏ வழக்கறிஞர் பிந்து கிருஷ்ணா வருகை தந்தார். அப்போது அங்கு நின்றிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகி செரியன் பிலிப் செய்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கேரளா பெண்

எம்எல்ஏ பிந்து கிருஷ்ணாவுக்குக் கைகொடுத்து வாழ்த்து தெரிவிப்பதற்குப் பதிலாக, செரியன் பிலிப் திடீரென அவரைக் கட்டிப்பிடிக்கப் பாய்ந்துள்ளார். பொதுவெளியில் மூத்த நிர்வாகி ஒருவரே பெண் பிரதிநிதியிடம் இவ்வாறு கண்ணியக்குறைவாக நடந்துகொண்டது அங்கிருந்தவர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் எதிர்பாராத செயலால் நிலைகுலைந்து போன பெண் எம்எல்ஏ அங்கிருந்து உடனடியாக விலகிச் சென்றார்.

கேரளா பெண்

கட்சியின் முக்கியக் கூட்டத்திலேயே பெண் எம்எல்ஏ ஒருவருக்கு நேர்ந்த இந்தச் சங்கடமான சம்பவம் கேரளா அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது. செரியன் பிலிப்பின் இந்த நடத்தைக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், இது குறித்து காங்கிரஸ் தலைமை விளக்கம் அளிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். கட்சி அலுவலகத்திற்குள்ளேயே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகப் புகார்கள் எழுந்துள்ளதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.