மூத்த ஹிஸ்புல்லா தளபதி சுட்டுக்கொலை.. உடலை துளைத்த 6 தோட்டாக்கள்!

 
ஷேக் முகமது அலி ஹமாடி

ஈரான் ஆதரவுடன் லெபனானில் செயல்படும் ஹிஸ்பொல்லா, இஸ்ரேல்-காசா போரில் ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தற்போது இஸ்ரேலுக்கும் காசாவிற்கும் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், மூத்த ஹிஸ்புல்லா தளபதி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ்

ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி ஷேக் முகமது அலி ஹமாடி, அமெரிக்காவில் எஃப்.பி.ஐ-யால் தேடப்படும் நபர். 1985 ஆம் ஆண்டு ரோமில் இருந்து ஏதென்ஸுக்கு 153 பயணிகளுடன் சென்ற விமானத்தை கடத்தியதிலும், அதில் பயணம் செய்த ஒரு அமெரிக்கரைக் கொன்றதிலும் அவர் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.

இந்த நிலையில், கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் வசித்து வந்த ஷேக் ஹமாடி, அவரது வீட்டின் முன் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆறு தோட்டாக்கள் அவரைத் தாக்கியதாகவும், ஷேக் ஹமாடி சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்பத் தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்ததாக அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web