மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த விஜயசாய் ரெட்டி!

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவர் வி.விஜயசாய் ரெட்டி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருப்பதாக அறிவித்துள்ளார். ஆந்திராவின் தற்போது சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அம்மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு மிகவும் நெருக்கமானவரான வி.விஜயசாய் ரெட்டி இன்று தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.
I am retiring from politics.
— Vijayasai Reddy V (@VSReddy_MP) January 24, 2025
I will resign from Rajya Sabha membership tomorrow, 25 Jan, 2025.
I am not joining any political party.
My resignation is not to attain any post/position, benefit, or monetary gain.
This decision is entirely personal. There is no pressure, or…
இவருடைய ராஜ்யசபாவில் ஆறு ஆண்டு பதவிக்காலத்தில் மூன்றரை ஆண்டுகள் மீதமுள்ள போதிலும், தனிப்பட்ட காரணங்களுக்காக தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததாகவும், தனது ராஜினாமாவை மாநிலங்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளேன், அவர் அதை ஏற்றுக்கொண்டார் எனவும் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் “ நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். மாநிலங்களவை உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்கிறேன்.
எந்த அரசியல் கட்சியிலும் சேரமாட்டேன். பதவி, சலுகைகள், பணத்திற்காக எதையும் எதிர்பார்த்து ராஜினாமா செய்யவில்லை. இந்த முடிவு முற்றிலும் எனது தனிப்பட்ட முடிவு. யாரும் என்னை ராஜினாமா செய்யும்படி கூறவில்லை” என பதிவிட்டுள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!