அதிமுகவில் பரபரப்பு... பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறாரா இபிஎஸ்?!

 
இபிஎஸ் வேலுமணி அதிமுக

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் அதிமுக 3ம் இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியடைந்த நிலையில், கட்சிக்குள் அதிருப்தி நிலவுகிறது. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் என குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ளன.

முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் பொதுக்குழுவை கூட்ட தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். பொதுக்குழு, செயற்குழு மூலம் பதவி நீக்கம் செய்யும் திட்டத்தை வகுத்து வருவதாகவும், இதற்காக 70% ஆதரவை திரட்டும் பணியில் எஸ்.பி.வேலுமணி ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.