பெங்களூருவில் பரபரப்பு... பிரபல நடிகை வீட்டில் கள்ளக்காதலன் தூக்கிட்டுத் தற்கொலை!

 
கிருஷி தாபண்டா

கன்னடத் திரைப்பட நடிகை கிருஷி தாபண்டாவின் பெங்களூரு இல்லத்தில், அவருடன் குடும்பத்தைப் பிரிந்து வாழ்ந்து வந்த பிரபல தொழிலதிபர் வைஷாக் (45) தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறை தரப்பில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், பெங்களூருவைச் சேர்ந்த வைஷாக் (45) சொந்தமாகக் கார் பழுதுபார்க்கும் பணிமனைநடத்தி வந்த தொழிலதிபர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி, மனைவியும் ஒரு மகனும் உள்ளனர். இதற்கிடையே, அவருக்கும் கன்னடத் திரைப்பட நடிகை கிருஷி தாபண்டாவிற்கும் (36) இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதன் காரணமாகத் தனது குடும்பத்தைப் பிரிந்த வைஷாக், கடந்த சில காலமாக நடிகை கிருஷியின் வீட்டிலேயே அவருடன் ஒன்றாக வசித்து வந்துள்ளார்.

கிருஷி தபாண்டா

நடிகை கிருஷி தாபண்டாவுடன் ஏற்பட்ட மோதல் மற்றும் வாக்குவாதங்கள் காரணமாக, கடந்த காலங்களில் திரைப்படத் தயாரிப்பாளர் அரவிந்த் ரெட்டி என்பவருக்கு வைஷாக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் வைஷாக் போலீசாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சில காலம் சிறை சென்று ஜாமீனில் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவத்தன்று இரவு நடிகை கிருஷி தாபண்டா திரைப்படப் படப்பிடிப்பு பணிகளுக்காகப் பெங்களூரு அருகே உள்ள நெலமங்களா பகுதிக்குச் சென்றிருந்தார். வீட்டில் தனியாக இருந்த வைஷாக், இரவில் நடிகை கிருஷியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த நடிகை கிருஷி, அவரைத் தொலைபேசியிலேயே சமாதானப்படுத்த முயன்றதுடன், படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்துள்ளார்.

பள்ளி மானவி தற்கொலை

இருப்பினும், நடிகை கிருஷி வீட்டிற்குள் வந்துப் பார்த்த போது, அதற்குள்ளாகவே வைஷாக் அறையின் மின்விசிறியில் தூக்கில் சடலமாகத்  தொங்கியுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், வைஷாக்கின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், வைஷாக்கின் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து நடிகை கிருஷி மற்றும் வைஷாக்கின் குடும்பத்தாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.