பெங்களூருவில் பரபரப்பு... "விநாயகர் கடவுளே இல்லை" என்று கூறி காரை உதைத்து ரகளை செய்த நபர்!

 
விநாயகர் காரை உதைத்து

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் விநாயகர் சிலை வைக்கப்பட்டிருந்த காரை உதைத்து ரகளை செய்த நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெங்களூரு ஹென்னனூர் ஹொராமாவு அருகே உள்ள பன்ஜாரா லேஅவுட் பகுதியில் சிவக்குமார் என்பவர் காலை நடைப்பயிற்சிக்குச் சென்றபோது, சாலையோரமாக நின்று கொண்டிருந்த ஒரு காருக்குள் விநாயகர் சிலையைக் கண்டுள்ளார்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

உடனே காரை உதைத்து ரகளை செய்த அவர், "விநாயகர் கடவுளே இல்லை" என்று அப்பகுதி மக்கள் முன்னிலையில் கூச்சலிட்டுள்ளார். இதனைத் தட்டிக் கேட்ட பொதுமக்களையும் அவர் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் காவல்துறையினர் உடனடியாகச் சிவக்குமாரைக் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஏற்கனவே மனநலப் பாதிப்புக்காக நிம்ஹான்ஸ் (NIMHANS) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் என்பது தெரியவந்ததை அடுத்து, போலீசார் அவரை மீண்டும் மேல் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.