சென்னையில் பரபரப்பு... கணவர் கண்முன்னே இளம்பெண்ணைத் தாக்கிய 3 பேர்.. நள்ளிரவில் அத்துமீறல்!

 
பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

சென்னை வேளச்சேரி அருகே நள்ளிரவில் கணவருடன் நின்று கொண்டிருந்த இளம்பெண்ணைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்ற 3 பேரை வேளச்சேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், தனது கணவருடன் பெசன்ட் நகர் கடற்கரைக்குச் சென்றுவிட்டு நள்ளிரவில் காரில் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். வேளச்சேரி டான்சி நகர் மேம்பாலம் அருகே காரை நிறுத்திவிட்டு, இருவரும் செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொண்ட கும்பல், தங்களை பார்த்து ஏன் ஆபாச சைகை செய்தாய் என்று தேவையில்லாமல் அப்பெண்ணிடம் தகராறில் ஈடுபட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில், கணவரின் கண்முன்னேயே அந்த இளம்பெண்ணை அக்கும்பல் கண்மூடித்தனமாகத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இது குறித்து பாதிக்கப்பட்ட தம்பதியினர் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த வேளச்சேரி காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்த தீபக் ராஜா (19), விக்னேஷ் (19) மற்றும் 17 வயதுச் சிறுவன் ஆகிய 3 பேரைக் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.