சென்னையில் பரபரப்பு... 14 பாடங்களில் அரியர்... தேர்வெழுத சொன்ன தாய், தம்பி படுகொலை... இளைஞர் வெறிச்செயல்!

 
சென்னையில் பரபரப்பு... 14 பாடங்களில் அரியர்... தேர்வெழுத சொன்ன தாய், தம்பி படுகொலை... இளைஞர் வெறிச்செயல்!

கல்லூரியில் அரியர் வைத்திருக்கும் பாடங்களை தேர்வெழுதி பாஸ் செய்ய சொன்னதால், தனது தாயையும், தம்பியையும் கழுத்து அறுத்து கொலை செய்து விட்டு தப்பியோடிய 20 வயது இளைஞரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை திருவொற்றியூர் திருநகர் தெருவைச் சேர்ந்தவர் பத்மா (45). இவருக்கு நித்தேஷ் (20) மற்றும் சஞ்சய் (14) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில், பத்மாவின் மூத்த மகன் நித்தேஷ் கல்லூரி தேர்வில் சில பாடங்களில் பெயில் ஆகி இருந்ததாக தெரிகிறது. அரியர் பாடங்களைப் படித்து, தேர்வெழுதி பாஸாகுமாறு கூறியதால், தனது தாயார் பத்மாவையும், தம்பி சஞ்சய்யையும் கழுத்தை அறுத்து கொலை செய்து அதிர வைத்துள்ளார். 

சென்னையில் பரபரப்பு... 14 பாடங்களில் அரியர்... தேர்வெழுத சொன்ன தாய், தம்பி படுகொலை... இளைஞர் வெறிச்செயல்!

இருவரின் கழுத்தையும் அறுத்துக் கொலைச் செய்த நித்தேஷ், அவர்களின் சடலங்களைக் கோணி பையில் கட்டி வைத்து விட்டு, உறவினர்களுக்கு போன் மூலம் கொலைச் செய்த தகவலை, ‘தனது தாய், தம்பியை கொலை செய்ததாகவும், தன்னை தேட வேண்டாம், தானும் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாகவும்’ மெசேஜ் அனுப்பியிருக்கிறார். 

இதனையடுத்து உடனடியாக உறவினர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்த சமப்வ இடத்திற்கு விரைந்தனர். சம்பவம் இடத்திற்குச் சென்ற போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு, கொலை வழக்குப்பதிவு செய்து, தப்பிச் சென்ற நித்தேஷைத் (20) தேடினார்கள். 

அதன் பின்னர், திருவொற்றியூர் கடற்கரையில் மறைந்திருந்த நித்தேஷைக் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.  14 பாடங்களில் பெயிலாகி அரியர் இருந்த நிலையில், அதைப் படித்து தேர்வு எழுதி முடிக்கச் சொல்லி தொடர்ந்து கண்டித்து வந்ததால் தாய் மற்றும் தம்பியை நித்தேஷ் கொலை செய்ததாக போலீசரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.