சென்னையில் பரபரப்பு... தவெக இணைச் செயலாளர் மீது தாக்குதல்!
Aug 21, 2026, 07:15 IST
சென்னை விருகம்பாக்கத்தில் தவெக இணைச் செயலாளர் மீது அதே கட்சியைச் சேர்ந்த புதிய நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விருகம்பாக்கம் பகுதி தவெக இணைச் செயலாளராகப் பணியாற்றி வரும் முத்துக்குமார் என்பவர் மீது, கட்சியில் புதிதாக இணைந்த சிலர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. தனது பொறுப்பிலிருந்து விலகக் கோரி அவரை மிரட்டித் தாக்கியதாகப் பாதிக்கப்பட்ட முத்துக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட முத்துக்குமார் உடனடியாகக் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். தன் மீது தாக்குதல் நடத்திய புதிய நிர்வாகிகள் மீது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
