சென்னையில் பரபரப்பு... தேனாம்பேட்டை மெட்ரோ நிலையம் அருகே அடுக்குமாடி கட்டிடத்தில் தீ விபத்து!

 
தேனாம்பேட்டை தீ விபத்து

சென்னை அண்ணாசாலையில் தேனாம்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள பயன்பாட்டில் இல்லாத தனியார் அடுக்குமாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தேனாம்பேட்டை மெட்ரோ நிலையம் அருகே உள்ள அந்தத் தனியார் கட்டிடத்தின் தரைதளத்தில் நேற்று மதியம் எதிர்பாராதவிதமாகத் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் கரும்புகை மண்டலம் போலச் சூழ்ந்ததால் அண்ணா சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

தீ தீயணைப்பு வெடிவிபத்து பட்டாசு

தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுதாரிப்புடன் போராடி சுமார் 30 நிமிடங்களுக்குள்ளாகத் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பயன்பாட்டில் இல்லாத கட்டடம் என்பதால் விபத்தின்போது யாருக்கும் எந்தவித காயமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை என்று காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.