சென்னையில் பரபரப்பு... விவாகரத்து வழக்கில் முன்விரோதம் - மாமனாரைத் துப்பாக்கியால் சுட்ட மருமகன் கைது!

 
ரவுடி போலீசார் கைது கொலை

சென்னை செனாய்நகர் பகுதியில் மனைவி பிரிந்து வாழ்ந்த ஆத்திரத்தில், மாமனாரைத் துப்பாக்கியால் சுட முயன்ற கேரளாவைச் சேர்ந்த இளஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை செனாய்நகரைச் சேர்ந்த விஜயகுமாரின் மகள் பிரீத்திக்கும், கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஜித்துக்கும் திருமணமாகியுள்ளது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும், பிரீத்தி தரப்பிலிருந்து விவாகரத்து கோரியும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

தன் மனைவி பிரிந்து செல்வதற்குக் காரணம் அவரது தந்தை விஜயகுமார் தான் என்று ஸ்ரீஜித் கடும் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், மாமனார் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்ட அவர், தான் மறைத்து வைத்திருந்த ஏர் துப்பாக்கியால் விஜயகுமாரை நோக்கி இரண்டு முறை சுட்டுள்ளார். அதிர்ஷ்டவசமாக குண்டுகள் சுவரில் பாய்ந்ததால் விஜயகுமார் எந்தவிதக் காயமுமின்றி உயிர் தப்பினார்.

இந்தச் சம்பவம் குறித்துப் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, உடனடியாகச் செயல்பட்ட காவல்துறையினர் ஸ்ரீஜித்தை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.