சென்னையில் பரபரப்பு... சூட்கேசில் கிடந்த இளம்பெண் சடலம்!

 
சென்னையில் பரபரப்பு... சூட்கேசில் கிடந்த இளம்பெண் சடலம்!

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் சூட்கேசில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் இருந்து துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸ் ஒன்றில் பெண்ணின் உடல் மீட்கப்பட்டுள்ளது அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

துரைப்பாக்கம் மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றில் அதிகளவு ரத்தக்கறை இருப்பதாகவும், சூட்கேஸில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

சொந்த சகோதரனை அடித்தே கொலை செய்த கொடூர அக்கா!! பிணம்

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சூட்கேசை மீட்டு திறந்து பார்த்ததில், சூட்கேசில் பெண் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில், இருந்தது அதிர்ச்சியளித்தது. 

பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியுள்ளனர். சூட்கேசில் சடலமாக மீட்கப்பட்ட பெண் யார்? கொல்லப்பட்டது யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தடயவியல் நிபுணர்களும் அந்த பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சூட்கேசில் கொலையுண்டிருக்கும் இளம்பெண் யார்? சூட்கேசை யார் கொண்டு வந்து போட்டுள்ளனர் என்கிற விசாரணை நடைபெற்று வருகிறது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web