டெல்லியில் பரபரப்பு... தர்மேந்திர பிரதான் வீட்டின் முன் போலீசார் குவிப்பு - பாதுகாப்பு தீவிரப்படுத்தல்!
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து மத்தியக் கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்துள்ள நிலையில், டெல்லியில் உள்ள அவரது வீட்டின் முன் முன்னெச்சரிக்கையாகப் பெருமளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரத்திற்குப் பொறுப்பேற்று மத்தியக் கல்வி அமைச்சர் பொறுப்பிலிருந்து தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். ராஜினாமாவைத் தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியிலுள்ள அவரது இல்லத்தின் முன் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கடந்த சில வாரங்களாக மாணவர்கள் மற்றும் இளைஞர் அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன. இந்தப் போராட்டங்களின் போது சட்ட ஒழுங்கைக் கட்டுப்படுத்தக் காவல்துறையினர் தடியடி உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் போராட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட போதிலும், முன்னாள் மத்திய அமைச்சரின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையைக் கருதி அவரது இல்லத்தைச் சுற்றிப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
