கள்ளக்குறிச்சியில் பரபரப்பு... 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் போக்சோவில் கைது!

 
பாலியல் பாலியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 29 வயது இளைஞரைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமிக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பெரியசாமி (29) என்ற வாலிபர் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் குடும்பத்தினர், உடனடியாக இதுகுறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தனர்.

கற்பழிப்பு பலாத்காரம் செக்ஸ் பாலியல் பெண்

சிறுமியின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பெரியசாமி மீது கடுமையான போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த பெரியசாமியைப் போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். கைதான வாலிபரிடம் இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்துப் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீஸார் எச்சரித்துள்ளனர்.