கர்நாடகாவில் பரபரப்பு... CONGRESS MLA வினய் கொலைக் குற்றவாளி - நீதிமன்றம் தீர்ப்பு... இன்று தண்டனை விவரங்கள் அறிவிப்பு!

 
காங்கிரஸ் வினய் கொலை காங்கிரஸ் வினய் கொலை

கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாஜக மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், தார்வாட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி உள்ளிட்ட 17 பேரை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு, தார்வாட் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினராக இருந்த பாஜகவின் யோகேஷ் கவுடா, மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.

பள்ளி மாணவி தற்கொலை!! கல்லூரி மாணவர் கைது.!!

அப்போது காங்கிரஸ் அமைச்சராக இருந்த வினய் குல்கர்னிக்கு இந்தக் கொலையில் தொடர்பு இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 2019-ல் கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, இந்த வழக்கு சிபிஐ (CBI) வசம் ஒப்படைக்கப்பட்டது. 2023 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் எம்.எல்.ஏ-வான வினய் குல்கர்னி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார்.

பெங்களூருவில் உள்ள மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வந்தது. வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வினய் குல்கர்னி மற்றும் அவருடன் தொடர்புடைய 17 பேரைக் குற்றவாளிகள் என நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.

காங்கிரஸ்

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்களை நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 16, 2026) அறிவிக்க உள்ளது. மக்கள் பிரதிநிதி ஒருவர் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பது கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், வினய் குல்கர்னி தனது எம்.எல்.ஏ பதவியை இழக்க நேரிடும். மேலும், சிறைக்காலம் முடிந்து அடுத்த 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடவும் தடை விதிக்கப்படலாம்.