கரூரில் பரபரப்பு... அதிமுக வேட்பாளருக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 52 குக்கர்கள் பறிமுதல்!

 
சோதனை சோதனை

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், கரூரில் வாக்காளர்களுக்குக் கொடுப்பதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குக்கர்களைத் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

சோதனை தேர்தல் நடத்தை விதிமுறைகள் விதிகள்

கரூர் மாவட்டம் புலியூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில், வாக்காளர்களுக்குப் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாகத் தேர்தல் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அந்தத் தோட்டத்தில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு அறையில், கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் எஸ். திவ்யா-வுக்கு ஆதரவாக விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த 52 புதிய குக்கர்கள் கண்டறியப்பட்டன. இவற்றிற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அதிகாரிகள் அவற்றை உடனடியாகப் பறிமுதல் செய்தனர்.

சோதனை

பறிமுதல் செய்யப்பட்ட குக்கர்கள் அனைத்தும் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாகத் தேர்தல் விதிமீறல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. "வாக்காளர்களைக் கவர இத்தகைய பரிசுப் பொருட்கள் பதுக்கப்பட்டுள்ளதா? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்?" என்பது குறித்துத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருமான வரித்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.