மதுராந்தகத்தில் பரபரப்பு... வாக்குப்பதிவு நிறுத்தம்... விசில் சின்னம் பட்டனில் கருப்பு மை!

 
gr

தமிழகத்தில் இன்று நடைபெற்று வரும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவின் போது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்துக்கு நேராக உள்ள பட்டனில் கருப்பு மை இருந்ததால் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது.

இரு தொகுதிகளிலும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மதுராந்தகம் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளும், தாராபுரம் தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல்

இந்த நிலையில், மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட தண்டரை புதுச்சேரி வாக்குச்சாவடியில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் விசில் சின்னத்துக்கு நேராக அமைந்திருந்த பட்டனில் கருப்பு மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து அந்த வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் வாக்களிக்க வந்தவர்கள் சுமார் அரை மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து தேர்தல் அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கருப்பு மை எவ்வாறு பட்டனில் வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதுவரை இது தொடர்பாக எந்த முறைகேடும் நடைபெற்றதாக அதிகாரப்பூர்வமாக முடிவு தெரிவிக்கப்படவில்லை.இதேபோல், மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட 109-வது வாக்குச்சாவடி மையத்திலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல்

இதன் காரணமாக சில வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மதுராந்தகம் இடைத்தேர்தல் இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, அக்டோபர் 9-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன.